வலிமை: ரீலிஸ் தேதி வெளியிட்ட போனி கபூர்!


valimai ajith - Dhinasari Tamilvalimai ajith - Dhinasari Tamil

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரித்துள்ள படம் ‘வலிமை’. கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘வலிமை’ படம் ஒமிக்ரான் தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி என்பது பிப்ரவரி 15 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

அதனால், பல படங்களின் வெளியீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியீடடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வரும் பிப்.,24ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply