

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு நல்ல நடிகை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவர் ஒரு நல்ல கவிதை எழுதுபவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் எழுதிய கவிதை இதோ:
மௌனம் பகிர்ந்து
கை விரல் பிடித்து
கதை பேசிய இரவு
விடியாமலே போயிருந்தால் தான் என்ன?
உனக்கு மட்டும் கேட்ட
என் மனம் இசைத்த பாடல்
மொழி தேடாமல்
உன்னோடே சேர்ந்து தூரம் போனது.
வரிகளற்ற என் பாடலை திருப்பிக்கொடு.
இம்முறை மௌனம் புரிய என்னிடம் ‘நாம்’ இல்லை
வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன்.


நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ சிம்புவின் ‘பத்து தல’ அருண்விஜயின் ‘யானை’ கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ஐ
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News
Leave a Reply