யாரு இப்படி இருப்பாங்க..? ஏகே என்றால் ஏ ஒன் கேரக்டர்..!


ajith1 - Dhinasari Tamilajith1 - Dhinasari Tamil

தற்போதெல்லாம் அஜித் படத்தில் நடிக்க பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனராம். ஒரு முன்னணி நடிகர் படத்தில் பலரும் நடிக்க ஆர்வமாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை தான் ஆனால், இங்கு நடப்பதே வேறு.

சில நேரம் பெரிய பட ஹீரோ படங்களில் நடிப்பது என்றால் பலர் சம்பளம் கூட வேண்டாம் என கூறிவிடுவர். அதனை பயன்படுத்தி சிலர் சம்பளம் கூட தராமல் இழுத்தடித்து விடுவார்கள்.

அந்த நடிகர்களும் சரி அந்த பெரிய நடிகர் படத்தில் நடித்துவிட்டோம் என சென்றுவிடுவர்.

ஆனால், அண்மைக்காலமாக இந்த சம்பவம் அஜித் படத்தில் நடக்கவில்லையாம். ஆம், சில வருடங்களாக அஜித் இந்த செயலை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, ரிலீசுக்கு முன்னரே தனது மேனஜர் மூலம் படத்தில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வந்துவிட்டதா என கேட்டுகொள்கிறாராம்.

ஒருவேளை அப்படி சரியாக சம்பளம் வரவில்லை என்றால், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு சார், இன்னும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. கொஞ்சம் கொடுத்திருங்க என அன்பு கட்டளை இட்டுவிடுகிறாராம்.

அஜித் ஒரு பெரிய நடிகர் சொன்னால் அதனை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கிடைப்பது கடினமாகிவிடும். என தயாரிப்பாளர்களும் மறுப்பேதும் தெரிவிக்காமல் கொடுத்து விடுவார்களாம்.

அதனால் தான் அஜித் படத்தில் நடிக்க பல கலைஞர்களும் ஆர்வமாக இருக்கிறார்களாம்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply