அட்லியை சந்தித்து பேசிய விஜய்.. வைரலாகும் வீடியோ…

atlee

atlee

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

மாஸ்டருக்கு பின் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஒரு பக்கம் எஸ்.ஜே.சூர்யா பெயரும் அடிபடுகிறது.

இந்நிலையில், இயக்குனர் அட்லியின் அலுவலகத்திற்கு விஜய் விசிட் அடித்துள்ளார். அங்கு அவர்கள் அடுத்த படம் பற்றி பேசினார்களா என்பது தெரியவில்லை. பேசிமுடித்து விட்டு விஜய் தனது காரில் ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply