வலிமை நடிப்பில் மீண்டும் வினோத் இயக்கத்தில், உருவாகும் AK61 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித்தின், 60 வது திரைப்படமான வலிமை திரைப்படம், உலக அளவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிய ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்தது. சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடியை கடந்து சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் வலிமை. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
பான் இந்தியா திரைப்படமான இதில், அஜித்தை தாண்டி நிறைய திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் தான் அதிகம் ரசிக்கப்பட்டன.
இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம்.
இதையடுத்து, படத்தின் பூஜை இன்று ஐதரா பாத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினரின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஜிப்ரான், எடிட்டர் விஜய் வேலுமணி, ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்புராயன் மற்றும் பல்வேறு பணிகளுக்கான பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.