விமான நிலைய அதிகாரிகள் தன் பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி வலியுறுத்தியதாக நடிகர் சித்தார்த் நடித்த நாடகம் அம்பலமாகி உள்ளது. நடந்தது இது தான்:
திமுக அனுதாபி, சமூக வலைதள போலிப் போராளி நடிகர் சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரிடம் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் ஹிந்தியில் பேசி 20 நிமிடங்கள் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளை விமர்சித்துள்ளார்.
தனது பெற்றோர்களுடன் சில தினங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையம் வந்த போலிப் போராளி பிரபலமும், நடிகருமான சித்தார்த் ” சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்”என அவர் பதிவிட்டுள்ளார்.
உண்மையில் நடந்தது என்ன ?
விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையம் வந்தார். மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையின் சோதனை மையத்திற்கு வந்தார். சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறும் ஐடி கார்டு காட்டுமாறும் கேட்கப்பட்டது.
இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான். அவருடைய குடும்பத்தினரின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. சித்தார்த்தின் சோதனை நடந்த போது பணியில் இருந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழில்தான் அந்த பெண் பாதுகாப்பு வீரர் பேசினார். இந்தியில் பேசவில்லை. குடும்பத்தினரின் உடமைகளை அடிக்கடி சோதனை செய்ததாக சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும்தான் கோபம் அடைந்தனர். விமான நிலைய நெறிமுறைகளுக்கு உட்பட்டு நாகரீகமாக சோதனை நடத்துபவர் மீது சித்தார்த் கோபப்பட்டது ஏன், இவர் என்ன சட்டத்திற்கு அப்பற்படவரா என்ற கேள்வியை சமூக ஊடக பதிவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இது பற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் மேலும் கூறும் போது, சோதனை நடந்த போது அங்கு வந்த தெலுங்கு பேசும் பபொறுப்பு அதிகாரி ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது என்பது குறித்து சித்தார்த் குடும்பத்தாருக்கு விளக்கமும் அளித்தார்.
10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கோபத்துடன் நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு கிளம்பிவிட்டார். அவருடன் வந்தவர்களும் சென்றுவிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி சித்தார்த்திடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. சித்தார்த் வைத்த குற்றச்சாட்டுக்கள் தவறானது. விமான நிலையத்திற்கு வந்தது முதல் அவர் புறப்பட்டு செல்வது வரை உள்ள காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது” என்றார்.
பாஜகவிற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து தனது வெறுப்பை காட்டிவருபவர்தான் இந்த சித்தார்த். சில மாதங்களுக்கு முன்னர்கூட பிரபல பேட்மிட்டன் வீராங்கனை சைனா நேவால் குறித்து கீழ்த்தரமான பதிவை பதிவிட்டு எல்லோரிடமும் வாங்கிக்கொண்டார். அதன்பின், வேறு வழியின்றி மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை வழக்குகளில் இருந்து காத்துக்கொண்டார்.
தற்போதும், நடக்காத ஒரு விஷயத்தை விளம்பரம் தேடிக்கொள்ள சித்தார்த் செயகிறாரா ? சமீப காலங்களில் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் எதையாவது சொல்லி, மத்திய அரசை விமர்சிப்பதன் மூலம் ரெட் ஜியான்ட் படங்களின் வாய்ப்பை பெறலாம் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா ? அல்லது பபொங்கல் தொகுப்பு குளறுபடி குற்றச்சாட்டில் இருந்து திசை திருப்ப திமுக அரசின் எக்கோ சிஸ்டம் இவரை தூண்டிவிட்டுள்ளதா ? என்ற கேள்வியையும் ஊடகப் பதிவர்கள் முன்வைத்துள்ளனர்.