இப்போது இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய்..

To Read it in other Indian languages…

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை பின்தொடர தொடங்கியுள்ளனர்.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.

அக்கௌண்டை தொடங்கியதும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு,‘‘ஹாய் நண்பா, நண்பிஸ்” என பதிவிட்டுள்ளார். கணக்கு தொடங்கிய சில நிமிடங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply