அமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைமுக்கு 3 மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும், 4 மொழிகளில் வெளியான இப்படத்தை இதுவரை 10 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனராம். ஓடிடி தளத்தில் எந்த படத்திற்கும் இந்த வரவேற்பை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: