மாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பல இயக்குனர்களின் பெயர் அடிப்பட்டது.
இறுதியில் நெல்சன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய 2 பேரின் பெயர்களும் மாறி மாறி அடிபட்டது. தற்போது விஜயை நெல்சன்தான் இயக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
மேலும், சமீபத்தில் நிகழ்ச்சியில் விஜயும், அவரின் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். எனவே, விஜயை இயக்குவது நெல்சன்தான் என்பது உறுதியாகியுள்ளது.
Leave a Reply