பார்த்திபனே இப்படி செய்யலாமா? – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்

parthiban

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக பார்த்திபனுக்கு ஒரு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதை விட அதிக சம்பளத்தை பார்த்திபன் கேட்கிறாராம். அதற்கு காரணமும் இருக்கிறது. பார்த்திபான் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்த நாட்களை படக்குழு பயன்படுத்திக்கொள்ளவில்லையாம். அதற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே, ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என பார்த்திபன் கூறுகிறாராம். இன்னும் 10 நாட்கள் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாம். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில்,  தயாரிப்பாளராக இருக்கும் பார்த்திபனே இப்படி செய்யலாமா? என புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர்.

%d bloggers like this: