ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!
பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே!
பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் நடிக்க, அட்லியின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்று வெளியானது பிகில் படம். விஜய் ஜோடியாக நயன்தாரா! தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்த்துப் பழகி சலித்த முகமாகத்தான், வழக்கம் போல் அழகுப் பதுமையாக வந்து போகிறார் நயன்தாரா. நன்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய நயன்தாராவுக்கு இந்தப் படத்தில், விஜய்யை காதலிப்பதை தவிர பெரிதாக வேலை எதுவுமே வைக்கவில்லை இயக்குனர். பாவம்…!
முதல் பாதி நீளமாக உள்ளது. இதனால் படம் மெதுவாகச் சென்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. இதில் இயக்குனர் அட்லி பயங்கரமாக தடுமாறியிருக்கிறார். இரண்டாம் பாதி அந்த அளவுக்கு மோசமில்லை என்கின்றனர் ரசிகர்கள். ஆனால் முதல் பாதியிலேயே ஜவ்வாக இழுப்பதால், பொறுமை இழந்து, எப்படா வீட்டுக்குப் போவோம் என்ற மன நிலைக்கு வந்துவிடுகின்றனர் ரசிகர்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதால், அந்த நேரத்துக்கு ஹிட் அடித்து ஓய்ந்து போகும் ரகத்தில் பாடல்கள் இந்தப் படம் வரும் முன்பே ஹிட் அடித்து, யூடியூப்பில் வைரலாகி வரவேற்பைப் பெற்று விட்டது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல்கள் தான். குறிப்பாக, சிங்கபெண்ணே பாடல் காட்சிகள் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பாடல் கட்சியைத்தான் ரசிகர்கள் அடிக்கடி தேய் தேய் என்று தேய்க்கப் போகும் டிவி.,க்களில் பார்த்துவிடப் போகிறார்களே!
விஜய்யின் ஒரு கதாபாத்திரமான ராயப்பன் பாத்திரத்தில், ஒருவித மேனரிஸம் திணிக்கப்பட்டுள்ளது… பொருந்தாத வகையில்!
விஜய் அரசியலுக்கு வருவார், வருவார் என்று அவரது தந்தையால் பிகிலு ஊதி உசுப்பேத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதை நம்பும் அவரது ரசிகர்களுக்காக, அட்லி சில பன்ச் வசனங்கள் வைத்திருக்கிறார். ஆனால் கதை விஷயத்தில் அட்லி கோட்டை விட்டுவிட்டார்! இதை விஜய் ரசிகர்களே திரையரங்கை விட்டு வரும் போது சோகத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
பிகிலுவின் கதைச்சுருக்கம் இதான்….
ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன் (அப்பா விஜய்). அவருக்கு தன் மகன் மைக்கேல் தன்னை போன்று ரவுடி ஆகாமல் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. (அதாவது மைக்கேல் ராயப்பன்…! இந்தப் பெயரை எங்கோ கேட்டது போலிருக்கே…! அடடே…!)
மைக்கேலும் அப்பாவின் ஆசைப்படி கால் பந்தாடுகிறார். அப்படியே இந்திய அணிக்கும் தேர்வாகி விடுகிறார். தில்லிக்கு புறப்படும் நேரத்தில் மைக்கேலின் வாழ்க்கையில் பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறுகிறது. அவரது அப்பா ராயப்பன், தன் மகன் மைக்கேல் வாழ்க்கையில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விடுகிறது.
விஜய்யின் வாழ்க்கை வேறு மாதிரியாக மாறிப் போனதால், அவரால் கால்பந்தாட்டத்தில் ஈடுபட முடியாமல் போகிறது.
விஜய்யின் நண்பரான கதிர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளாராக இருக்கிறார். அவரை வில்லன் டேனியல் பாலாஜி கத்தியால் குத்திவிட, இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்நிலையில் அந்த பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மைக்கேல் நியமிக்கப்படுகிறார்.
ஒரு ரவுடியை எப்படி பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஆக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான்… பிளாஷ் பேக் ஸீன். மைக்கேல் பிகிலாக இருந்த திகில் காட்சிகள் காட்டப் படுகின்றன.
இதன் பின்னர், பிரச்னைகள் முளைக்கின்றன. அவற்றை எல்லாம் அடித்து துவம்சம் செய்து, விஜய் எப்படி அந்த பெண்கள் அணியை ஒரு வழிக்குக் கொண்டு வருகிறார்… ஒரு வழியாக எப்படி வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதை. மகன் விளையாட்டு வீரராகாவிட்டாலும், அந்தப் பின்னணியில் பயிற்சியாளர் ஆகி, ஆக… எப்படி அவர் தந்தையின் கனவை நிறைவேத்துகிறார் என்பது தான் கதை மூலம் சொல்லப் படும் நீதி.
மடக்கு ஊதி… அதாவது பிகிலு படத்தில் என்ன வசனம் இருந்தாலும் யாரும் வாய தொறந்திராதீக சாமிகளா…
படத்து சோலிய அட்லியே முடிச்சிருவானாம்…
பார்த்தவுங்க சொல்றாங்க!– சமூகத் தளங்களில்…
முதல் பாதியிலயே
அப்பா விஜய்ணாவ வில்லன் கொன்னுடுறான்…
இரண்டாம் பாதில
படம் பாக்க வந்த எல்லாரையுமே அட்லி கொன்னுடுறான்…
Begil பரிதாபம்…– சமூகத் தளங்களில்…