[prisna-google-website-translator]

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

Review of Madras Meter Show on Zee5 – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த மெட்ராஸ் மீட்டர் ஷோ தற்போது ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு ‘மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை’ என்கிற தலைப்பில் இந்த குழு பல வீடியோக்களை முகநூல் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. தற்போது மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.

ஜீ5 தளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோவை ஆர்.ஜே. வைத்தியா, திவ்யா மற்றும் துர்கேஷ் ஆகியோர் நடத்துகின்றனர். தமிழக நடப்பு நிகழ்வுகள், அரசியல், செய்திகள் உள்ளிட்ட பலவற்றையும் கிண்டலடிக்கும் விதத்திலும், அதே நேரத்தில் யார் மனதும் நோகாமல் நகைச்சுவையாகவும் வழங்கவுள்ளனர். வாரம் ஒரு முறை ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் ஹேஷ்டேகர், ஒரு டூ மினிட்ஸ் இருக்கா, பிரபலங்களின் பேட்டி உள்ளிட்ட பலவிதமான தலைப்புகளை அசால்ட்டாக டீல் செய்கின்றனர். எனவே, கண்டிப்பாக இந்நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும்.  கடந்த ஜூலை 29ம் தேதி ஜீ5-ல் மெட்ராஸ் மீட்டர் ஷோ முதல் நிகழ்ச்சி தொடங்கியது.

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

இதற்கு முன்பு மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ‘நம்ம ஊரு மளிகை கடை’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முகநூலில் 3.5 மில்லியன் பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். 52 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 56,969 பேர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதேபோல் யுடியூபில் 2,49, 481 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

நம்ம ஊரு மளிகை கடை வீடியோ 90களில் இருந்த மளிகை கடை அண்ணாச்சியை அப்படியே பிரதிபலித்திருந்தது. ஒரு மளிகை கடை மளிகை கடையாக மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மக்களுடன் சினேகமாக, உதவும் வகையில் நல்ல உறவுடன் இருந்தது என்பதை அழகாக, தத்ரூபமாக, உண்மை மிக அருகில் சென்று காட்டியிருந்தனர். அதனால் இந்த வீடியோ அவ்வளவு வரவேற்பை பெற்றது. அதேபோல் நம்ம ஊர் தெரு கிரிக்கெட்,  நம்ம ஊரு சலூன் கடை, என் துப்பட்டா என் உரிமை, நேசமணி Vs கிட்சிணமூர்த்தி என இதன் பட்டியல் நீள்கிறது.

ஆங்கிலத்தில் கரண்ட் டிரெண்டிங் என்பார்களே அதைத்தான் மெட்ராஸ் மீட்டர் ஷோ பார்வை வித்தியாசமாக, ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

ஆங்கிலத்தில் Satire என அழைக்கப்படும் நையாண்டிதான் மெட்ராஸ் மீட்டரின் அடிநாதமாக விளங்குகிறது. நையாண்டியை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. குறிப்பாக இந்த கால இளைஞர்கள் நையாண்டியை பெரிதும் விரும்புகின்றனர். முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றிய நையாண்டி தனமான கருத்துகளே வைரலாக பகிரப்படுகிறது. இதில் குறிப்பாக மீம்ஸ்களை கூறலாம். ஒரு கருத்தை சீரியஸாக கூறுவதற்கு பதில் நையாண்டியாக கூறும் போது எளிதில் அது மக்களை சென்று சேர்கிறது.

தற்போது இந்தியாவில் பல நையாண்டி நிகழ்ச்சிகள் இளைஞர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில், நடப்பு அரசியல், வேலை வாய்ப்பு, இன்றைய கல்வியின் நிலை, இளைஞர்களின் சொந்த வாழ்க்கை, அலுவலக சூழல், அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், இளைஞர்கள் வாழ்க்கை பார்க்கும் பார்வை, அவர்களின் கனவு, நட்பு, காதல், திருமணம், வாழ்க்கை என அனைத்தும் நையாண்டியாகவே பேசப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை நன்றாக படித்த இளைஞர்களே பெரும்பாலும் ஆங்கிலத்தில் நடத்துகிறார்கள். நடு நடுவில் தமிழிலும் பேசுவார்கள். ஆனால், மெட்ராஸ் மீட்டர் ஷோ இதை முழுக்க முழுக்க தமிழில்  நடத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.

இந்தியர்கள் பொதுவாகவே காமெடி நிகழ்ச்சிகள் செய்திகளை ரசித்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். பெரும்பாலான இந்தியர்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி, யுடியூப், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை சார்ந்தே இருக்கிறது.  உண்மையை விளங்கிக் கொள்ளவும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை வித்தியாசமான கோணத்தில் காணவும்  நகைச்சுவையே அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.  எனவேதான் மெட்ராஸ் மீட்டர் ஷோ இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

இதில் குறிப்பாக Evam Standup Tamasha, Saikiran, Random Chikibum, Aravind SA, Alexander the Comic உள்ளிட்ட சில யுடியூப் சேனல்களுக்கு வரவேற்பு உள்ளது. ஒரு கட்டத்தில் இது Stand up Comedy – யாக மாறி தமிழில் தொலைக்காட்சிகளில் மதுரை முத்து, ரோபோ சங்கர், கோவை குணா உள்ளிட்டோர் நகைச்சுவையாக பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

ஆனால், மெட்ராஸ் மீட்டர் ஷோ மக்களிடையே நேரடியாக சென்று தற்போதைய அரசியல் சூழ்நிலை, உணவு உண்ணும் முறை, வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் வாழ்வில் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய பல விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பி அதற்கான பதில்களை பெற்று நமக்கு வழங்குகின்றனர்.

ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

ஜீ5 இணையதளத்தில் கடந்த 29ம் தேதி முதல் வாரம் ஒரு முறை மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. முதல் வாரத்திற்கான டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. ‘நியூசன்ஸ் நியூஸ் சென்ஸ். எல்லாமே கூடிய விரைவில்’ என குறிப்பிடப்பட்டு இந்நிகழ்ச்சியில் துர்கேஷ் ஹரிதாஸ், திவ்யா, வைத்தியா, எம்.சுந்தர், பாஸ்கி பாலசுப்பிரமணியன், கிரண் கேஷவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு பார்வையாளர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சி தொடர்பான டிரெய்லர் வீடியோவை கீழ்கண்ட லிங்க்கில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

மேலும், மாதம் ரூ.69/-  மட்டுமே செலுத்தி நீங்கள் மெட்ராஸ் மீட்டர் ஷோவின் அனைத்து முழு நிகழ்ச்சிகளையும் ஜூ5 இணையதளத்தில் கண்டுகளிக்கலாம். இன்றே முந்துங்கள்…

https://www.zee5.com/

The post ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show appeared first on – Dhinasari Tamil.

Source: விமர்சனம்

The post ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show appeared first on Vellithirai News.

Leave a Reply