[prisna-google-website-translator]

ஜெய் பீம்: JAI BHIM Movie Review!

jaibheem
jaibheem

~ விமர்சனம்: அனந்து

சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து ஓடிடி யின் சூப்பர் ஸ்டார் சூர்யா முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது காவல்துறையின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நீதி வாங்கி கொடுத்த நிஜ சம்பவத்தை படமாக தயாரித்து நடித்திருப்பதே ஜெய் பீம் . பெயருக்கேற்றது போலவே படம் பழங்குடி மக்களுக்கான நியாயத்தை பேசுகிறது ‌‌…

சூர்யா படம் ஆரம்பத்து அரைமணி நேரத்தை நெருங்கும் போது தான் வருகிறார் . தனக்காக ஹீரோயிசம் செய்யாமல் கதையோடு இயல்பாக வருவது ஆறுதல் ‌‌. பழங்குடி தம்பதிகள் மணிகண்டன் , ஜோஸ் இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள் . ஸஜயன், எம்.எஸ் பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள் ‌‌. அதிலும் எம்எஸ் சம்பந்தமில்லாமல் சிவாயநம என்கிறார் . பிராகாஸ் ராஜின் பங்களிப்பு அருமை ‌‌.‌கதிரின் ஒளிப்பதிவு பலம் . ஷான் ரோல்டனின் இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது …

உண்மை சம்பவத்தை சினிமாவுக்கேற்ற மாதிரி அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் .‌ விறுவிறுப்பான திரைக்கதையும் உதவியிருக்கிறது . ஹீரோவுக்கென தனி காட்சிகள் இல்லாமல் கதையோடு ஒன்றி வருவதற்கு பாராட்டுக்கள் …

படம் விசாரணை , கர்ணன்‌ படங்கள் போல போலீஸ் வன்முறையை காட்டுகிறது ஆனால் அதிலேயே நீண்ட பயணம் செய்வது அலுப்பை தருகிறது . ஹீரோயிசம் இல்லையென்றாலும் ஹீரோ ஈஸியாக எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது சறுக்கல் . பலர் பாராட்டுவது போல குறிப்பாக ஆனந்தவிகடன் 57 மார்க் ! தருமளவிற்கெல்லாம் படம் வொர்த் இல்லை இருந்தாலும் உண்மை சம்பவத்தை போரடிக்காமல் சொன்ன விதத்தில் ஜெய் பீம் ஜெயம் …

ரேட்டிங்க் – 3.50* 

வீடியோ விமர்சனத்திற்கு கீழே காணவும் ...

[embedded content]

ஜெய் பீம் – JAI BHIM Movie Review

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply