தி கேரளா ஸ்டோரி: நிஜத்தைக் காட்டிலும் கொடூரமானது அல்ல..!


kerala story pic

நல்ல வேளை, நேற்று குழுவாகச் சென்று பார்த்தோம்…இன்று தமிழகத்தின் எல்லா தியேட்டர்களில் இருந்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசும் திரை அரங்கு உரிமையாளர்களும். ஜிகாதிகளுக்குப் பணிந்தது வியப்பில்லையே !

சுதிப்தோ சென் இயக்கியுள்ள இத் திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கூட பார்க்க வேண்டிய படம் என்பது தான் உண்மை. படத்தில் எந்த இடத்திலும் இஸ்லாமிய மதத்தை இழிவு செய்யவில்லை. உலகத்தை இஸ்லாமிய மயமாக்க விரும்பும்

ஐஎஸ்ஐ_எஸ் எப்படி தனது சதி வலையை விரிக்கிறது, மாற்று மதப் பெண்களை மூளைச் சலவை செய்து, லவ் ஜிகாத் மூலம் எப்படி

ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு பாலியல் அடிமைகளாக அனுப்புகிறது, ஆண்கள் எப்படி தற்கொலை படையினராய் செயல் படுகின்றனர் என்பதே கதை.

உலகமே கண்டு நடுங்கும் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு படம் இது என்று தான் பார்க்க வேண்டுமே தவிர இஸ்லாத்திற்கு எதிரான படமாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதே உண்மை …

சரி, படத்திற்கு வருவோம்..

கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செவிலியர் படிப்பிற்காக கல்லூரியில் இணையும் நாயகிகளான ஷாலினி(ஆதா ஷர்மா), கீதாஞ்சலி(சித்தி இத்னானி), நிமா(யோகிதா பிகானி), ஆசிஃபா (சோனியா பலானி) ஆகியோர் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் சேர்கின்றனர்.

இதில் ஆசிஃபா என்ற பெண் இஸ்லாம் மத நெறிகளைக் கடுமையாகப் பின்பற்றுபவராகவும் லவ் ஜிகாத்துக்கு துணை நிற்பவரராகவும் உள்ளார். நாளடைவில் நெருக்கமாகும் தன் தோழிகளிடமும் இஸ்லாம் மதத்தின் தேவை குறித்தும் அல்லா ஒருவனே இறைவன் மற்ற தெய்வங்கள் கோழைகள் என அவர்களிடம் கூறுகிறார். அதைப் அப்பெண்கள் விளையாட்டாக கடந்து செல்கின்றனர்.

ஆனால், ஆசிஃபா அவர்களை பல்வேறு வழிகளில் மூளைச்சலவை செய்து இஸ்லாம்தான் பெண்களைப் பாதுகாக்கிறது என நம்பவைக்கிறார் அவர். திட்டமிட்டு முறையில் பொது வெளியில் ஒரு தாக்குதல்….பின்னர் ஹிஜாப் அணிந்தால் பாதுகாப்பு என்று
ஹிஜாப் அணிய வைக்கப்படுகிறார்கள்.

இந்துக் கடவுள்களை குறித்து கடுமையாக கேள்விகளை எழுப்பும் ஆசிஃபாவிற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஷாலினியும் கீதாஞ்சலியும். விளைவு, புர்க்கா அணிவதில் துவங்கி இஸ்லாம் குறித்து அறிந்து கொள்வதுவரை ஆர்வம் காட்டுகிறார்கள். ஜிகாதிகளின் பிரச்சார வலிமையும் இந்துக்களின் சமய அறியாமையும் இங்கு தெளிவாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே ஆசிஃபா தான் சார்ந்திருக்கும் இஸ்லாம் மத அடிப்படைவாத கும்பலிடம் தன் தோழிகளின் புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார். அக்குழுவின் வேலை, மாற்று மதப் பெண்களை இஸ்லாமியராக மாற்றி ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக அனுப்பி வைப்பது.

இந்த வலையில் அப்பெண்களைச் சிக்க வைக்க இரு இஸ்லாமிய இளைஞர்கள் ஷாலினி மற்றும் கீதாஞ்சலியிடம் நெருக்கமாக பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் அது காதலாக மாறி உடல் உறவில் முடிகிறது. காதலில் இருந்து அவர்களை உடல் உறவுக்கு அழைத்துச் செல்லும் கபடம், அதன் பின்னர் அந்த ஆண்கள் நடந்து கொள்ளும் விதம் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி கர்ப்பம் அடைகிறார்.
கர்ப்பமான ஷாலினி தன்னைத் திருமணம் செய்து கொள் என தன் காதலன் ரமீஸிடம் சொல்கிறாள். அவன் மறுத்து தலை மறைவாகிறான். உடனே, ஷாலினி ரமீஸை அறிந்த இமாம் ஒருவரிடம் தன் நிலையைக் கூறுகிறாள். இதைக் கேட்ட இமாம் ‘ரமீஸுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இன்னொருத்தியின் கணவன் மீது நீ ஆசைப்பட்டது இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது. இந்தப் பாவத்தைக் கழுவ நான் சொல்கிற இஸ்லாமியனைத் திருமணம் செய்துகொண்டு சிரியா செல். அங்கு சேவை செய்து புண்ணியத்தைத் தேடிக்கொள்’ என்கிறார். ஷாலினி ஃபாத்திமாவாக மாறி இன்னொரு இஸ்லாமியரை திருமணம் செய்து, குடும்பத்தினரை தவிக்க விட்டபடி சிரியா செல்கிறாள்.

அங்கு அவளுக்கு நடந்தது என்ன ?

கீதாஞ்சலியின் நிர்வாணப் படங்களையும் விடியோக்களையும் அவரின் காதலன் சமூக ஊடகங்களில் பதிவு செய்கிறான். அதன் பின் அவளுக்கு என்ன நடக்கிறது ?

நிமாவின் நிலை என்னவாகிறது ?

இவை மீதிக்கதை.

இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் ஜிகாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும் அவர்களின்
மனப்போக்கு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கல்லூரி சுவற்றில் ‘காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்’, ‘தேசியவாதம் ஹராம். இஸ்லாம் ஒன்றே அடையாளம்’ போன்ற பிரிவினைக் கருத்துக்கள் பெரும்பாலான கேரள இஸ்லாமியர்கள் மனங்களில் பதிந்து உள்ளதை படம் பிடித்துள்ளார். மூளை சலவை செய்யப்பட்டவர்கள்
தன் சொந்த மதத்தை ஹராம் என்பார்கள், உங்கள் உடன் பிறந்தவர்களை காபிர் என்பார்கள் என்பதை அருமையாக புரிய வைக்கிறார்.

இந்தியாவிலிருந்து லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றி மூளை
சலவை செய்ய பட்டு அனுப்பபடுபவர்கள் suicide bomber அல்லது செக்ஸ் அடிமைகளாக ISIS தான் பயன் படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை உள்ளபடி கூறியுள்ளார். இதற்காக Synthetic Drugsக்கு எப்படி
பழக்கப்படுத்துகிறார்கள் என்பதையும் காட்டி உள்ளார்.

ஒரு காட்சியில் கீதாஞ்சலி கம்யூனிஸ்ட்டான தன் தந்தையிடம் அழுதுகொண்டே சொல்கிறாள். ‘நீ நாத்திகம், கம்யூனிசம் பேசியதற்கு நம் நாட்டின் கலாச்சாரத்தையும் மதப்பெருமைகளையும் பேசியிருக்கலாம்’ என்கிறாள்.

அனைத்து தடைகளை மீறி வெளியான தி கேரளா ஸ்டோரி ‘உண்மையில்’ யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களிடம் போய் சேர வே‌ண்டியது அவசியம். மதசார்பு பேசுபவர்களிடம் நாம் மத சார்பு பேசித் திரிந்தால் நாம் இழக்கப் போவது நமது வாரிசுகளை, நம் மதத்தை, நம் தேசத்தை என்பதை சொல்லாமல் புரிய வைக்கும் படம் இது என்றும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சினிமா மிகப்பெரிய ஊடகம். நம் கருத்துக்கள் பல கோடி மக்களைச் சேர்கிறது என்று அறிந்தே முகத்தில் அறையும் உண்மைகளை படமாக்கி உள்ளார்.

அவசியம் பார்க்க வேண்டிய படம், குறிப்பாக நம் வீட்டு இளம் பெண்கள் பார்க்க வேண்டிய படம். திரை அரங்குகள் திரையிட மறுத்தால் என்ன, OTT இல் வரும் பொழுது பாருங்கள்…தெளிவு பிறக்கும்.

சமூக நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை, எந்த ஒரு மதத்தையும் இழிவு செய்யாமல் எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு நம் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  • நம்பி நாராயணன்

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply