Tag: tamil cinema

  • வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

    தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், விக்ரம் அரும்பு மீசை முளைக்கும் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா… ஹீரோ யா தெரியுமா?

    தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதன்பின் ஈட்டி, ஜீவா,மாவிரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ திற உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தொடர் தோல்வி அவரது மார்கெட்டை காலி செய்து விட்டது. கடைசியாக காஷ்மோரா படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் படுதோல்வி என்பதால் அவருக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில், சில வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். பானா காத்தாடி…

  • சினிமாவிற்கு வந்து 28 ஆண்டுகள்… தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்…

    சினிமா ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படங்களில் சிறு வயது விஜயகாந்தாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். அதன்பின் நடிப்பே தனது குறிக்கோள் என முடிவெடுத்து அடம் பிடித்த விஜயை ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் ஹீரோ ஆக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால் அப்படம் தோல்வி. அதன்பின் கவர்ச்சி, மசாலா என கலக்கி ‘ரசிகன்’ படம் எடுத்தார். அப்படம் ஹிட். தொடர்ந்து அப்பா இயக்கத்தில் நடித்து…

  • டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை?.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் தமிழ்…

  • ராஜா ராணி கெட்டப்பில் அஜித் – ஷாலினி – வைரலாகும் புகைப்படம்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவரை ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கின்றனர். அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திரைத்துறையில் வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ராஜா ராணி போல் அஜித்தும், ஷாலினியும் உடை அலங்காரம் செய்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆடையை சென்னையின்…

  • செல்போனை பறிகொடுத்த கவுதம் கார்த்திக் – பட்டப்பகலில் கொள்ளையர்கள் அட்டகாசம்

    நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முத்தையா இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை வழியாக அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரின் செல்போனை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். எனவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, போலீசார் கவுதம் கார்த்திக்கின்…

  • ஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்!..

    தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. எனவே, அவர் யாரை அடுத்து இயக்கப்போகிறார் என்கிற குழப்பம் நிலவி வந்தது. தற்போது அந்த குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது. அவர் சூரியை இயக்குவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலத்தில் கடம்பூர் என்கிற பகுதியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஒரு…

  • சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் அருண் விஜய்.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

    தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் தற்போதுதான் வெற்றி படங்களை கொடுக்க துவங்கியுள்ளார் அருண் விஜய். இவர் நடித்த தடம் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக மாற்றியது. தற்போது பாக்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடம்பை ஏற்றியுள்ளார். இப்படத்திற்கு பின் ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்க்கு ரெஜினா ஜோடியாக நடித்து…

  • தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்

    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் நடிகர் தனுஷை நடிகராக மாற்றியவரே செல்வராகவன்தான். அவர் கொடுத்த பயிற்சியில்தான் தனுஷ் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். இதை அவரே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். புதுப்பேட்டைக்கு பின் தனுஷும், செல்வராகவனும் இணைந்து படம் பண்ணவில்லை. தற்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. செல்வராகவன் தம்பிக்காக கதையை உருவாக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. தனுஷ் தற்போது மாரி செல்வராஜ்…

  • அமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைமுக்கு 3 மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும், 4 மொழிகளில் வெளியான இப்படத்தை இதுவரை 10 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனராம். ஓடிடி தளத்தில் எந்த படத்திற்கும் இந்த வரவேற்பை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.