மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆறுதலை தந்துள்ளது.
கடந்த மாதத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து திருச்சியை சேர்ந்த சுஜித்தும், ஹரியானாவில் ஷிவானி என்ற சிறுமியும் அநியாயமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு எந்திரத்தின் மேல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப் பட்டு வருகின்றன. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க போதுமான கருவிகளும் மாற்றும் யோசனைகளும் அரசிடம் இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா, நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துள்ளான். அவனை தேசிய பேரிடர் குழு போராடி மீட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இப்போது இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் ஆறுதலைத் தந்துள்ளது.
— Maharashtra Times (@mataonline) November 14, 2019
The post ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை – வீடியோ ! appeared first on Dhinasari Tamil.
Source: டிரைலர்
The post ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை – வீடியோ ! appeared first on Vellithirai News.