கன்னத்தில் காயம்… நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் – போலீசார் தீவிர விசாரணை

chitra

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார்.

சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் இன்று அதிகாலை அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

chitra

4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரும், அதே ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்துள்ளார் சித்ரா.அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை வெளியே காத்திருக்க சொல்லியிருக்கிறார். ஹேமந்தும் வெளியே காத்திருந்துள்ளார். ஆனால், நெடுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்கவில்லை. தட்டிப்பார்த்தும் பதில் இல்லை. எனவே, அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே சென்று பார்த்த போது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சித்ராவின் தற்கொலை சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chitra

இந்நிலையில், சித்ராவின் மரணத்தில் சில மர்மங்கள் நீடித்து வருகிறது. ஹேமந்த் ஏன் சித்ராவுடன் தங்கியிருந்தார்?.. குளியலறையில் தனியாக தாள்பாழ் இருக்கும் போது ஹேமந்தை அறையை விட்டு வெளியே காத்திருக்குமாறு சித்ரா கூறியது ஏன்?.. அவரது கன்னத்தில் காயங்கள் எப்படி ஏற்பட்டது? என்கிற சந்தேகங்கள் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு கூட படப்பிடிப்பில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. அது உண்மை எனில் திடீரென அவர் ஏன் தற்கொலை எண்ணம் வந்தது என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

மேலும்,தனது மகளின் மரணத்திற்கான காரணத்தை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என சித்ராவின் தந்தை புகார் அளித்துள்ளார். எனவே, குடும்ப பிரச்சனை ஏதேனும் இருந்தததா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் ஹேமந்த் மற்றும் நேற்று இரவு ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.