இராமாயணத் தொடர்! மறு ஒளிப்பரப்பிலும்… முதலாக வந்து உலக சாதனை!

மறு ஒளிபரப்பில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராமாயணத் தொடர் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான டிவி தொடர், ராமாயணம். 1987 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பான இந்த தொடர் மொத்தம் 78 பகுதிகள் வரை சென்றது. அப்போது, கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்து சாதனை படைத்ததாகக் கூறப்பட்டது.

டி.வி.க்கள் அதிகம் இல்லாத காலத்திலேயே இந்த தொடர் இந்தச் சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது, மறு ஒளிபரப்பில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, பல ரெக்கார்டுகளை உடைத்து, உலக அளவில் அதிகமானவர்கள் பார்த்தத் தொடராக ராமாயணம் சாதனைப் படைத்துள்ளது. இதை தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர். உலக அளவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக ராமாயணம் மாறியிருக்கிறது’ என்று கூறியுள்ளது.

Leave a Reply