[prisna-google-website-translator]

மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை !

மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை !

சரவணன் மீனாட்சித் தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ரட்சிதா தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

சரவணன் மீனாட்சி தொடரின் பல சீசன்களில் அதிக சீசன்களில் நாயகியாக நடித்தவர் ரட்சிதா. அந்த தொடரில் பல முறை கதாநாயகர்களை மாற்றினாலும் ரட்சிதாவை மட்டும் மாற்றவில்லை. அதற்கு அவருக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் உருவானதுதான் காரணம். 7 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகிய அந்த தொடர் கடந்த ஆண்டோடு முடிவடைந்தது.

இப்போது கர்நாடகாவில் வசித்து வரும் ரட்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப்புகைப்படம் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Source: டிவி-தொடர்கள்

The post மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை ! appeared first on Vellithirai News.

Leave a Reply