டீன் ஏஜ் பையனாக மாறிய சூர்யா! சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார்.

ஒரு படத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெடுவார் என்பதை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இயல்பு நிலைமை திரும்பிய பிறகு இந்தப் படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. அதில், 19 வயது கதாபாத்திரத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெட்டார் என்பது அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த காட்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply