[prisna-google-website-translator]

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

நடிகை ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.

இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

தெலுங்கு சினிமாவின் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, சமீபத்தில் பவன் கல்யாணை பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடியுள்ளதாக அவர் கூறியிருந்தார். சிரஞ்சீவி பற்றியும் அவர் பரபரப்பு புகார் கூறி இருந்தார்.

இந்நிலையில் பேஸ்புக் லைவில் தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணிக்கு மிரட்டல் விடுத்ததாக சைபர் கிரைம் போலீசார், ஶ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். ‘உன்னை பெண் என்பதால் விடறேன். உனக்கு என்னோட ஒரு முகம்தான் தெரியும். இன்னொரு முகத்தை பார்க்கணும்னு நினைச்சே, மோசமாயிரும்’ என்று மிரட்டல் விடுக்கும் விதமாக பேசி இருந்தாராம் ஶ்ரீரெட்டி.

இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நடிகை ரெட்டி புதிய வீடியோ ஒன்றை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார். சிவன் மேல் உள்ள காதலால் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சிவபெருமான் போலவும் சிவ பக்தராகவும் வேடம் அணிந்து நடித்துள்ளார். சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

[embedded content]
Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply