[prisna-google-website-translator]

கிளைமேக்ஸை மாத்த சொன்ன விஜய்.. ஹீரோவை மாத்தி ஹிட் கொடுத்த டைரக்டர்!

– Advertisement –

– Advertisement –

விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
அப்பொழுது அவரின் சினிமா வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் பூவே உனக்காக.

அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். குடும்ப கதையை எடுப்பதில் வல்லவரான விக்ரமன் அந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு சினிமாவில் ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தார்.

அதன் பிறகு விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக ஹிட்டடித்தது. விக்ரமன் திரைப்படங்கள் கூட்டுக்குடும்பம், உறவுகளின் மகத்துவம், சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களையும் கொண்ட திரைப்படங்களாக இருக்கும்.

இவர் இயக்குனராக அறிமுகமாகிய புது வசந்தம் திரைப்படம் முதல் பிரியமானவள் தோழி வரை எல்லா படங்களும் எவர்கிரீன் ஆக இருக்கும்.

2002ல் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா, லைலா நடித்து வெளியான திரைப்படம் உன்னை நினைத்தேன். சூர்யாவை ஒரு நல்ல நடிகராக நமக்கு அடையாளம் காட்டியது இப்படம் தான். சூர்யா, தன் காதலித்த பெண் காதலை ஏற்காத போதும் அவரை டாக்டருக்கு படிக்க வைப்பார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அந்த திரைப்படத்தில் விஜய் நடிக்கவேண்டியது என்றும் அது நடக்காத காரணம் குறித்தும் சித்ரா லக்ஷ்மணன் எடுத்த பேட்டியில் கூறி இருக்கிறார் இயக்குனர் விக்ரமன்.

“விஜய்ன்னு எஸ்ஏசி சாரோட பையன் ஒருத்தர் நடிச்சுட்டு இருக்காரு, அவர் டேட்ட வாங்கி வைங்க, பெருசா வருவாருன்னு சொல்லுவேன் எல்லா ப்ரொட்யூசர்கிட்டயும்.

அப்பறம் காதலுக்கு மரியாதை, லவ் டுடே, குஷி எல்லாம் ஹிட் ஆகி இன்னைக்கு சூப்பர்ஸ்டாரா இருக்காரு. அதுக்கப்புறம் உன்னை நினைத்து படம் அவருதான் நடிக்குறதா இருந்தாரு. ரெண்டு பாட்டும் ஷூட் பண்ணோம், அப்போ அவரே என்கிட்ட வந்து ரொம்ப சாரி கேட்டுட்டு, க்ளைமேக்ஸ்ல என்னமோ ஒரு ஈடுபாடு வரலன்னு சொன்னாரு.

அப்போ நான் அவர்கிட்ட தெளிவா சொல்லிட்டேன், இல்ல விஜய் இப்போ நீங்க சொல்றீங்கன்னு நான் க்ளைமேக்ஸ மாத்துனேன்னா படம் ஃபுல்லா ஒரு காம்ப்ளக்ஸ்லயே டைரக்ட் பண்ணுவேன். ஒன்னு ஒன்னும் பண்ணும்போதும் இது விஜய்க்கு பிடிக்குமா விஜய்க்கு பிடிக்குமான்னு யோசிச்சு யோசிச்சு டைரக்ட் பண்ணுவேன், அது எனக்கு சரிப்பட்டு வராது.

இதுவரைக்கும் நான் என்ன நினைத்தேனோ அதைதான் எடுத்துள்ளேன். அந்த ஆளுமை என்கிட்ட இருந்தது, யாரும் வந்து என்னிடம் இதை மாத்துங்க, இந்த டயலாக்க மாத்துங்கன்னு சொன்னதில்லை. இதற்கு முன்பு வேலை செய்தவர்களும் அப்படித்தான்.

விஜயகாந்த் எல்லாம் ஒரு வார்த்தை கூட கேக்காமதான் நடிச்சுட்டு போனாரு. உங்க பேச்ச கேட்டு நான் இத மாத்துனேன்னா சுதந்திரமா என்னால வேலை செய்ய முடியாது. ஒரு கட்டுப்பட்டோட இயக்குற மாதிரி இருக்கும், அது என் கேரக்டர்க்கு செட் ஆகாது, நாம படத்த நிறுத்திக்குவோம்,

இந்த கதை மேல் எனக்கு நம்பிக்கை உண்டு, நான் வேற ஹீரோவை வைத்து படத்தை செய்து கொள்கிறேன், நீங்க இந்த ப்ரொட்யூசருக்கு வேற இயக்குனர் வைத்து படம் பண்ணி கொடுங்க, நாம நண்பர்களாகவே இருப்போம்ன்னு சொன்னேன், இன்னைக்கு வரைக்கும் நண்பர்களாகதான் இருக்கோம்.” என்று கூறினார்.

கார்த்திக்குடன் படத்தை இயக்கும்போது ஏற்பட்ட இதேபோன்ற சம்பவத்தையும் குறிப்பிட்டார், “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தை இயங்கிக்கொண்டிருக்கும்போது, கார்த்திக் ப்ரொட்யூசரிடம் இந்த படம் எனக்கு அவ்வளவா பிடிக்கல, நான் நடிச்ச ‘நந்தவன தேர்’ மாதிரியே இருக்குன்னு சொல்லி குழப்பம் பண்றார்.

நான் வாகிணில ஷூட்ல இருந்தேன், அவரு மேக்கப் ரூம்ல இருக்காரு, ஷூட் முடிச்சிட்டு, நேரா கார்த்திக்கிட்ட போய்ட்டு, என்ன சார் என்ன பிரச்சனைன்னு கேட்டேன். எனக்கு என்னமோ இந்த படம் நந்தவன தேர் மாதிரியே இருக்கு, அதுலயும் இப்படிதான் ஹீரோயின பாடகி ஆக்குவேன்ன்னு சொன்னார்,

நான் உடனே இல்ல சார் அது வேற இது வேற இதுல ஹீரோயின பாடகி ஆக்குறதெல்லாம் கதை இல்ல, இதுல பாடகி ஆகி முன்னுக்கு வந்து அது இவராலதான் வந்தேன் அப்டின்னு அதுக்கு நன்றி செய்யுறதுதான் கதை, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது,

உங்களுக்கு காண்பிடன்ஸ் இருந்தா நடிங்க, இல்லனா இதே கதைய வச்சு நான் வேற நடிகரை வச்சு படம் பண்ணி ஹிட் கொடுத்து காட்றேன்னு சேலஞ்ச் பண்ணேன். இல்ல சார் உங்களுக்கு இவளோ கான்ஃபிடன்ஸ் இருக்குன்னா சரி சார் நான் பன்றேன்னு ஒத்துகிட்டார்.

நடிக்குறது மட்டும் இல்ல, நாளைக்கு பட வெற்றிவிழாவுல, இப்படி எனக்கு சந்தேகம் இருந்துது, விக்ரமன் சார் தான் நடிங்க ஹிட் ஆகும் ன்னு சொன்னாரு, இன்னைக்கு ஹிட் ஆகிருக்குன்னு சொல்லணும்னு சொன்னேன், அதே மாதிரி அவர் சொல்றேன்னு சொன்னாரு. ஆனா சொன்னாரு, கோல்டன் ஜூப்லி பண்ணோம் தாம்பரத்துல 250 நாள் ஓடினதுக்கு. அந்த விழாவுல அதே மாதிரி எனக்கு சந்தேகம் இருந்தது விக்ரமன் சார்தான் கான்ஃபிடன்டா இருந்தாரு இது ஹிட் ஆகும் ன்னு, இன்னைக்கு ஹிட் ஆகிருக்குன்னு சொன்னாரு.” என்றார்.

விஜயோடு ஒரு புரிதலோடுதானே பிரிந்தீர்கள், ஏன் அதன் பிறகு அவருடன் இணையவில்லை என்று கேட்டபோது, “அந்த நேரத்துல விஜய் வேற ஒரு லெவலுக்கு போயிட்டாரு, கில்லிக்கு அப்புறம் அவர் மாஸ் ஹீரோவா ஆகிட்டாரு.

அந்த விஜய்க்கு நான் படம் பண்ணா செட் ஆகாதுன்னு நானே விலகிக்கிட்டேன். அதை ஆடியன்ஸ் ஏத்துக்கவும் மாட்டாங்க, என் மேல உள்ள இமேஜூம் போய்டும், அது வேண்டாம்ன்னு நெனச்சேன்.

இன்னைக்கே நல்ல கதையோட போனா ஒத்துக்கதான் போறாரு, ஆனா விக்ரமன் விஜய் காம்போவுக்கு ஆடியன்ஸ் மத்தியில எதிர்பார்ப்பு உண்டாகுமான்னு கேட்டா சந்தேகம்தான்.” என்று கூறினார்.

– Advertisement –

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply