– Advertisement –
– Advertisement –
நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்து வருகிறது. 45 நாட்களைக் கடந்தப்பின்னும் ஆந்திரா, தெலங்கானாவில் தற்போதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை ரூ. 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார்.
ஏற்கனவே, ‘லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்த நிலையில்’அகண்டா’ தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றி இருந்தது. அதன்படி, வரும் ஜனவரி 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு டிஸ்னி ப்ளஸ்ஹாஸ்டாரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், பாலகிருஷ்ணா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்
– Advertisement –