– Advertisement –
– Advertisement –
அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின்னர், அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வலிமை படத்தைப்போல் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் , நடிகர் அஜித்- ஹெச்.வினோத் கூட்டணியின் புதிய பட ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், ஹைதராபாத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து, இப்பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வலிமை படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகியுள்ளதால், தயாரிப்பாளரின் நலனை கருத்தில் கொண்டு அஜித் அவருக்கு அடுத்த படத்தில் நடித்துக்கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரொனா பரவால் வலிமை படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –