ஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி பட ஸ்டில்களை நடிகை கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏஎல் விஜய் இயக்கத்தில் எடுக்கப் பட்டு வரும் படம் ‘தலைவி’! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜெயலலிதாவின் பிம்பத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் கங்கனா என்று பாராட்டுகள் குவிந்திருந்தன.

தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா ரணாவத் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்களும் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் என்பதால், தனது டிவிட்டர் பக்கத்தில் சில ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார் கங்கனா ரணாவத். மேலும், இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாகவும் கங்கனா ரணாவத் அந்த டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1335078803064799233

Leave a Reply