பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா?…

chitra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒருபக்கம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் யாரை நடிக்க வைப்பது என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதில், அதே தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வரும் நடிகை சரண்யாவை முல்லை வேடத்தில் நடிக்க வைக்கலாம் என பேசி வருகிறார்களாம்.

saranya

சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், சித்ரா தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன் இவருடன்தான் வீடியோ எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply