
அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘மிர்சாபூர்’.
இந்த வெப் சீரிஸில் லலித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா. இவர் மும்பையில் வசித்து வந்தார்.
36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிரம்மா மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஏதோ நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் நேற்று போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலிஸார் வந்து வீட்டின் கதவை உடைத்து பாத்ரூமுக்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பிரம்மா மிஸ்ராவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரம்மா மிஸ்ரா மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரம்மா மிஸ்ராவின் திடீர் மரணச் செய்தி பாலிவுட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related
Source: Dhinasari News – Vellithirai News