[prisna-google-website-translator]

விமர்சனம்: ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் கூட்டணியில்… ‘ஃபிரெண்ட்ஷிப்’

friendship3
friendship3

~ டி.எஸ்.வேங்கடேசன் ~

அமைதியான  அதே ஆக்ரோஷம் அடையும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் , சுட்டிப் பெண்ணாக லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள பிரெண்ட்ஷிப் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் குறும்பு,பாலியல் பலாத்கார பொய் வழக்கு, அதை உடைத்து வெளியேறுவதுதான் கதை.

கல்லூரி ஒன்றில் இயந்திரவியல் துறையில் படிக்கும் மாணவர்களை மூத்த மாணவர்கள் ராகிங் செய்கின்றனர். அப்போது அங்கு வரும் ஹர்பஜனையும் சீண்ட,  முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி மூத்த மாணவர்கள் விரட்டி அடிக்கிறார்.

friendship1
friendship1

அனைவரும் நண்பர்களாகின்றனர். அந்த வகுப்பில் பெண்களே கிடையாது. மாணவி ஒருவர் வருகிறார் என்றவுடன் அதை ஹர்பஜன் மற்றும் நண்பர்கள் விரும்பவில்லை. அதே நேரம் தனது குறும்பால், சிரிப்பால் அவர்களின் மனதை கரைத்து விடுகிறார் லாஸ்லியா.

friendship7
friendship7

லாஸ்லியா விரைவில் இறந்து விடுவார் என அவரது குடும்பத்தினர் நண்பர்களிடம் கூறுகின்றனர். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அவரது ஆசைகளை நிறைவேற்ற நண்பர்கள் முயல்கின்றனர்.  லாஸ்லியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யயப்படுகிறார்.

இதை கேட்ட நண்பர்களை பதைபதைக்கின்றனர். அவர்களது புலனாய்வில் அரசியல் புள்ளிகள், ரவுடிகள் சம்பந்தப் பட்டிருப்பதை கண்டனர். இவர்கள் மீது கொலை, பாலியல் பலாத்கார வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நடிகர் அர்ஜூன் அவர்களுக்காக வாதாடி உண்மையை வெளி கொணர்கிறார்.

friendship2
friendship2

அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவி, இதே போல பாலியல் பலாத்கார கும்பலிடமிருந்து தப்பிக்கும் போது கால் ஊனம் ஏற்படுகிறது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி முடிவெடுக்கிறார். இறுதியில் நீதி  வெல்கிறது.  ஹர்பஜனுக்கு குறைவான வசனங்கள். சண்டை காட்சிகளில் வெறும் கையாலேயே எதிரிகளை பந்தாடுகிறார். அர்ஜூன் சிங் வழக்கம் போல கலக்குகிறார்.

friendship6
friendship6

ஹர்பஜனின் நண்பர்கள் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளார்.  காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். அவரது நகைச்சுவையை விட சென்டிமெண்ட் காட்சிகள் அவருக்கு கைகொடுக்கின்றன.  லாஸ்லியா சுட்டித்தனமாக இளமை துள்ளலுடன் நடித்துள்ள போது, பல இடங்களில் செயற்கை தனம் வெளிப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்த வழக்கறிஞர் அர்ஜூனின் வசனங்கள் பாராட்டுக்குரியவை.

friendship5
friendship5

நட்பை மையமாக வைத்து  ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா படத்தை இயக்கி உள்ளனர். உதயகுமார் இதையில் பாடல்கள் சுமார். பின்னணி இதை அசத்தலாக உள்ளது. 

friendship4
friendship4

சாந்தகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் படம் சுவாரஸ்யமின்றி செல்கிறது. கிரிக்கெட் மேட்ச் கதையுடன் ஒட்டவில்லை. ஹர்பஜனுக்காக வைக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமாக தெரிகிறது. கிராபிக்ஸ் ரசிக்கும்படி இல்லை.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply