மாஸ்டருக்கு சிறப்பு காட்சி வேண்டுமா? – அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

மேலும், இதுவரை சினிமா வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் ஆயிரம் தியேட்டர்கள் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாம். இதுவரை எந்த படமும் இத்தனை தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடந்தது. தற்போது சிறிய படங்கள் வெளியாகி வருகிறது.

kadambur

ஆனால், தியேட்டரில் கூட்டமில்லை. எனவே, மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு எங்கள் தியேட்டரில் வெளியிடுங்கள். அப்போதுதான் முன்பு போல் ரசிகர்கள் தியேட்டருக்கு வர துவங்குவார்கள் என தியேட்டர் அதிபர்களே கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

இந்நிலையில், பொங்கலன்று வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் கொடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பெரிய நடிகர்களின் திரைப்படம் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: