[prisna-google-website-translator]

வலிமை: சென்சாரில் கட்டான காட்சிகள் விவரம்!

அஜித் நடித்த வலிமை படத்தில் நீக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட காட்சிகளின் விபரங்களை சென்சார் விரிவாக வெளியிட்டுள்ளது.

அந்த காட்சிகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது திருத்தப்பட்டன, அவை எந்த நிமிடத்தில் வரும் காட்சிகள் என்பதையும் விபரமாக வெளியிட்டுள்ளன.

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையில் வலிமை படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.350 கோடிக்கு விலை பேசியதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை போனி கபூர் மறுத்துள்ளார். வலிமை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தின் சேட்டிலைட் உரிமம், ஆடியோ உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியன ரூ.161 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

வலிமை படத்திற்கு யு சான்று கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி இருந்தது. அதிக சண்டை காட்சிகள் காரணமாக தான் யுஏ சான்று வழங்கியதாகவும் சென்சார் போர்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்சார் போர்டு வழிகாட்டுதலின் படி சில காட்சிகள் திருத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த காட்சிகளின் விபரங்களை சென்சார் போர்டு வெளியிட்டுள்ளது.

வலிமை படத்தில் சென்சார் போர்டால் திருத்தப்பட்ட 15 காட்சிகளின் விவரம் :

  1. படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும். ( வலிமை படத்தில் ஆங்கிலத்தில் மட்டும் இருந்துள்ளது). (174.41)
  2. விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. (117.26)
  3. தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது சாலையில் ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் ரோட்டில் விழும் பெண்ணின் காட்சி (10.41)
  4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சி (11.56)
  5. ‘வக்காலி’ எனும் வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. (16.32)
  6. கீழே விழும் நபரின் ரத்தம் தரையில் பரவும் காட்சி (42.50)
  7. ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி (52.14)
  8. கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி (58.07)

9.’Tha’ எனும் வார்த்தை வரும் மொத்த காட்சியும் நீக்கம் (81.32)

  1. நடுவிரலை காட்டும் காட்சி (100.48)
  2. போலிசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி (103.53)
  3. கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.
  4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் Disclaimer பெரிய பட்டை எழுத்துக்களில் போடப்பட்டுள்ளது (133.36)
  5. போதை பொருள் உட்கொள்ளும் காட்சி (135.02)
  6. கடவுள் தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது (137.35)

இதையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டாலும் வலிமை பற்றி அப்டேட் வருவது நிற்கவில்லை என பாராட்டி வருகின்றனர்.

சீக்கிரம் ரிலீஸ் தேதியை சொல்லுங்க. ஓடிடி ரிலீஸ் பற்றி யோசிக்கலாமே என பலரும் போனி கபூரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply