தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ் & JSK. சதிஷ் குமார்
பொருளாளர் – K.ராஜன்
துணை தலைவர் – P.T. செல்வ குமார்&R.சிங்காரவடிவேலன்
இணை செயலாளர் – K.G. பாண்டியன் & M. அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. எனவே தமிழ் சினிமாவிற்கு தற்போது மூன்று தயாரிப்பாளர் சங்கங்கள் உருவாகியுள்ளது. இப்படி திரைத்துறையினர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் தயாரிப்பு தொடர்பான பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும் என சினிமாத்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.