
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது நட்சத்திர நாயகனாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுவர்.
அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளான மே 1 வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அதுவும் தள்ளிபோனது.
இந்தநிலையில் தல அஜித்தின் பள்ளிகால புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் அந்த புகைப்படத்தில் எஸ்பிபி சரணும் உள்ளார்.

சரண் மற்றும் அஜித் இருவரும் டுடோரியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்துள்ளார்களாம்.
Related
Source: Dhinasari News – Vellithirai News