[prisna-google-website-translator]

கலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்!

cinematography bill - 1

இந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரப் பட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது!

இந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை! ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌! தமிழகத்தில் இதனை “கலையுலக தீவிரவாதி” சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது!

தமிழகம் ஒன்றே திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் மாநிலம், சினிமாக்காரனை தூக்கிவைத்து கொண்டாடும் மாநிலம் எனும் வகையில் தேசத்துக்கும் தேச அமைதிக்கும் மட்டும் பங்கம் விளைவிக்கும் படங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது அது “கருத்து சுதந்திரம்” என சூர்யா புலம்புவது அவர்மேல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது

அவர் சினிமா மூலம் தேச எதிர்ப்பையும் இன்னும் பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருந்தாரா? அதை அரசு தடுக்கும் நிலையில் அலறுகின்றாரா எனும் மிகபெரிய கேள்வி எழுகின்றது!

சூர்யாவின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சைகுள்ளானவை, நீட் தேர்வு என கடந்தவாரம் வரை புலம்பும் அவர், திமுக அரசின் நீட் தேர்வு என்பது அரசியல் மோசடியாக போனது பற்றி வாயே திறக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவக் கல்வி என சொல்லும் சூர்யா, நாடு முழுக்க ஒரே கல்வி என்பதற்கு ஏன் அமைதி என்பதும் தெரியவில்லை.

இப்பொழுது புதிய ஒளிபரப்பு சட்டத்துக்கு எதிராக தன் தீவிரவாத கும்பலை தமிழகத்தில் திரட்டுகின்றார் சூர்யா!சூர்யா என்பவருக்கு தேசாபிமானிகள் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்!

surya
surya

அய்யா சூர்யா, இங்கு உங்களின் சிங்கம் போன்ற படங்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை, நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் எதிரான கருத்துக்களை சொல்லாதவரை உங்கள் படத்தை யாரும் தடுக்கப் போவதில்லை!

எம்.ஜி.ஆரின் நம்நாடு முதல் மணிரத்தினத்தின் ரோஜா வரை யாராவது ஒரு குற்றம் சொல்லமுடியுமா? அதை யாராவது தடுத்தார்களா? ஏன் உம்முடைய சிங்கம், வானரம் ஆயிரம் படங்களை ஏதும் சொல்லமுடியுமா? நல்ல கருத்துக்களையும், நாட்டுபற்றையும் வளர்க்கும் படங்களை எந்த அரசு தடுக்க முடியும்?

பாரத விலாஸ் முதல் இந்தியன் போன்ற படங்களை எந்த சட்டம் தடுக்க முடியும்? கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேசஎதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள்? தேசாபிமானிகள் எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

தேசம் எப்படி ஏற்ற்கும்? 130 கோடி மக்களுக்கான‌ தமிழக கூத்தாடி ஒருவனின் கருத்தை கேட்டுத்தான் எழுதவேண்டும் என கருதுவது எவ்வகை நியாயம்?

cinematography bill2 - 2

இந்து எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் கொண்டு, திராவிட ஜால்ரா சத்தத்தில் எல்லா சட்டமும் என்னை கேட்டுகொண்டுதான் எழுதபட வேண்டுமென நீர் கருதினால் அதையெல்லாம் ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராக பேசுவது மட்டும் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிபட்ட கருத்து சுதந்திரத்தை இந்நாட்டில் அனுமதிக்கவே முடியாது! இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரமிது!

சீன படங்கள், கொரிய படங்கள் ஏன் ஈரானிய படங்கள் கூட உலகளாவில் விருதுகளை பெருகின்றன, ஆனால் அங்கெல்லாம் தேசவிரோத அவர்கள் கலாச்சார விரோத கருத்து ஒரு புள்ளி கூட அனுமதிக்கப் படுவதில்லை! உலகாளும் ஹாலிவுட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை இடம்பெற முடியாது!

ஆம் சினிமா என்பது ஒரு ஊடகம் எனும் வகையில் அந்நாடுகள் வலு கவனமாக மக்களிடம் செல்லும் கருத்துக்களை நோக்குகின்றன, அதில் நாட்டுக்கும் சமூக அமைதிக்கும் எதிரான கருத்து என்றால் உடனே தடுக்கின்றன‌! உங்களுக்கு ஒரு விஷயம் அழுத்தி சொல்ல விரும்புகின்றோம்!

இந்த சட்டம் பாஜகவின் மோடி கொண்டுவரும் சட்டம் அல்ல, இது இந்திய அரசின் சட்டம்! கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது! அந்த நாட்டுக்கு எது நல்லதோ எது சரியோ அதைத்தான் மோடி செய்கின்றார், இதை எந்த வருங்கால பிரதமரும் மாற்ற முடியாது!

நாட்டுக்கு விரோதமற்ற, இந்து விரோதமற்ற படங்களை நீங்கள் எவ்வளவும் எடுங்கள், மற்றபடி இந்த சட்டம் பற்றி ஏன் அஞ்சுகின்றீர்கள் என்பதுதான் தெரியவில்லை! ஒரு பாம்பு வேட்டையாடி அதன் திறமைக்கேற்ப உண்ணலாம், ஆனால் ஊருக்குள் புகுந்து காவல்காரன் கையில் இருக்கும் கம்பு என் “உணவு வேட்டைக்கு” எதிரானது என்றால் அது நகைப்புக் குரியது!

இது தேசம், அரசு அதன் காவலாளி ! அந்த அரசு இந்நாட்டுக்கு எது தேவையோ அதை மிக தெளிவாக உறுதியாக செய்கின்றது, அதை கண்டிப்பது நியாயமில்லை, எல்லா விஷயங்களிலும் இப்படி நீர் அழிச்சாட்டியம் செய்வதும் சரி அல்ல‌!

இந்தியாவில் ஆயிரகணக்கான நடிகர் நடிகையர் இருக்கும் நிலையில் நீர் ஒருவர்தான் நடிகர் என்பது போல் குதிப்பதும் சரியல்ல‌! நீர் சொன்னபடி இச்சட்டத்தை எதிர்த்து திரையுலகை விட்டு செல்வதாக செய்தால் உம்மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் சரியாகும், நீர் தேசவிரோத கைகூலி என்பதும் சினிமாவில் குழப்பம் செய்யமுடியா நிலையில் ஓடி விட்டீர் என்பதும் உண்மையாகும்!

இச்சட்டத்தை எதிர்த்து நீர் சினிமாவில் இருந்து விலகினால் அது மிக்க நல்லது, நாட்டுக்கு அது நீர் செய்யும் மிகபெரிய சேவையாக அமையும்! அந்த நல்ல விஷயத்தை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!

இந்நாடு என்பது உம்மைப் போன்ற நடிகனை நம்பி இல்லை, உமது வியாபாரத்திற்காக நீர் எதையும் பேசித் திரியலாம்! ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டி விட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர்! ஆனானாட்ட எம்.ஜி.ராமசந்திரனே இந்தியனாக நல்ல குடிமகனாக தன் படங்களிலும் அரசியலிலும் இருந்தார் என்பதை மறக்க வேண்டா!

நீர் ஒரு நடிகன், சினிமா மாயையில் நிற்கும் அற்ப உருவம் அதை தவிர உமக்கு என்ன உண்டு? எல்லையில் பனிமலையிலும் ராஜஸ்தான் வெயிலிலும் அசாம் காடுகளிலும் நிற்கும் இந்திய வீரனின் காலணிக்கு கூட உமக்கு இந்நாட்டை பற்றி அதன் சட்டங்களை பற்றி பேச‌ தகுதி இல்லை என்பதனை முதலில் உணருங்கள், அதுதான் உமக்கு தெளிவினை கொடுக்கும்!

ஆனாலும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து சினிமாவில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அந்த படுதோல்வி அரசியலை கண்டிக்காமல் இப்படியெல்லாம் கிளம்புவது உம்மேல் மிகப் பெரிய பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது!

உடனே சினிமாவில் இருந்து விலகி தமிழ்நாட்டில் இருந்தே விலகி நீவீர் வேறு எங்காவது செல்ல வாழ்த்துக்கள், மறக்காமல் உங்கள் அருமை மனைவியினையும் அழைத்து சென்றுவிடவும்!

ஆம் இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் “கலை தீவிரவாதத்தை” செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் அயோக்கியதனம் உமக்கு புரியவரும், அந்த அனுபவத்தில் நல்ல இந்தியனாக திருந்தி வருவீர்கள்!

  • ஸ்டான்லி ராஜன்

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply