தீபாவளி கொண்டாட்டம்: நயன்-சிவன் இப்படி கொண்டடினாங்களாம்!

sivan nayan
sivan nayan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல் வயப்பட்டார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நயன்தாராவின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

nayan
nayan

இவர்கள் இருவருக்கும் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். எல்லா பண்டிகைகளுக்கும் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிடுவார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வளையத்தில் வைரலாகும். தீபாவளி கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இரவு நேரத்தில் வானவேடிக்கை நடுவே விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா தீபாவளி வாழ்த்து கூறினார்.

இந்த வீடியோவின் பின்னணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்து இருந்தது. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply