ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

shruthi

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் ஏற்கனவே ‘நேர்கொண்ட பார்வை’என்கிற பெயரில் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். அவரின் மனைவியாக வித்யாபாலன் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் அவருக்கு சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உண்டு. ஆனாலும் ஒரு முழுபடத்திற்கான சம்பளம் அவருக்கு கொடுக்கப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளது.

Leave a Reply