Category: கிசுகிசு

  • குஷ்பூ ஏந்தப் போகும் தாமரைப் பூ..!

    bjp-kushpoo காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று குஷ்பு இவ்வாறு பாஜக.,வில் இணைய உள்ளதாக டிவிட்டர் பதிவுகளில் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக ஒரு பதிலளித்தார் குஷ்பு. Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts…

  • பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

    vishal  நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவராகவுமுள்ள  நடிகர் விஷால் அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார்! கடந்த முறை நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் கடைசிக் கட்டத்தில் அது இயலாமல் போனது. இருப்பினும் தாம் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்…

  • காக்கா முட்டை ஐஸ்வர்யா இல்லை.. இது புளுகு மூட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்!

    திமுக.,வின் எம்.பி.,யும் அரசியல் நாடக இயக்குனருமான கனிமொழி அளித்த உடையை அணிந்து கொண்டு, அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை உதிர்த்து திரை உலகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு கேமரா முன்பு இயக்குனர் சொல்லியபடி வசனம்பேசி நடிக்கும் நடிகன் நடிகைகள் சிலர், திமுக.,வின் எம்.பி.,யும் அரசியல் நாடக இயக்குனருமான கனிமொழி அளித்த உடையை அணிந்து கொண்டு, அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை உதிர்த்து, சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் பதிவிட்டு,…

  • த்ரிஷா திருமண சீகரெட்..! ஜோடி யாரு தெரியுமா?

    trisha த்ரிஷாவுக்கு கெட்டிமேளம் கொட்ட இருக்கிறது! விவாதத்திற்கு பெயர்போன ஹீரோவோடு திருமணம் நிச்சயம். சைலண்டாக அனைத்தும் ரெடி. தென்னிந்தியாவின் ஸ்டார் ஹீரோயின் திரிஷா ஒருவழியாக மணமேடை ஏற இருப்பதாக தெரிகிறது. கோலிவுட் ஸ்டார் ஹீரோவான சிம்புவோடு அவருடைய திருமணம். திருமணத்திற்கு சைலண்டாக அனைத்து ஏற்பாடுகளும் நடப்பதாக டாக். டாலிவுட் மோஸ்ட் எலிஜிபுள் லேடி பேச்சிலர் லிஸ்டில் திரிஷா பெயர் முக்கியமாக கூறலாம் . 37 வயது வந்தாலும் அழகு குறையாமல் சவுத் இந்தியன் ஆடியன்சை மகிழ்வித்து வரும்…

  • யாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய்  ஸ்ருதிஹாசன்!

    ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் படுதாராளமாக படுக்கையறைக் காட்சியில் நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படமும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளார். வித்யுத்…

  • கொரோனா அறிகுறி: தனிமைப் படுத்திக் கொண்ட நயந்தாரா, விக்னேஷ் சிவன்!

    sivan nayan நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த  சிலர், கொரோனா அறிகுறியால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.  கோயம்பேடை அடுத்து, கோடம்பாக்கத்தையும் வாட்டி எடுத்து வருகிறது கொரோனா. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.  இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா என சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல்…

  • மீண்டும் ஒரு திருமணம்… இம்முறை இயக்குனர் பீட்டர் பால்… வனிதா விஜயகுமாரின் அழைப்பிதழ்!

    தமிழகத்தில் கோடம்பாக்க கலைக் குடும்பம் என்று அறியப்பட்ட நடிகர் விஜயகுமார் மகள் வனிதா, இப்போது மீண்டும் ஒரு திருமணம் செய்ய இருக்கிறார். தன் திருமணத்துக்கான அழைப்பிதழை இப்போது அனுப்பியுள்ள அவர், கொரோனா காலம் என்பதால் மிகக் குறைவான நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் தனது திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.   விஜய் நடித்து 1995ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். பிறகு மாணிக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரண்டு…

  • போர் அடிக்குது இந்த போதை… த்ரிஷா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    trisha krishnan பேஸ்புக், ட்விட்டர் என சமூகத் தளங்களை போதை என வர்ணித்த நடிகை த்ரிஷா, இவற்றுக்கு தற்காலிகமாக விடை சொல்லி, இந்தக் கொரோனா ஊரடங்கு நேரத்தில் முழுக்கு போட்டதற்கு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  சென்னை அழகியாக மிஸ் சென்னை நிலையில் இருந்து  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆன திரிஷா இரு பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே கோலோச்சி சாதனை படைத்துவிட்டார்.. அவர்,  இந்தப் பொது முடக்க காலத்தில், டிஜிட்டல்…

  • லாக்டௌனில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் சூப்பர் ஸ்டாரின் மகள்!

    house cleaning superstar daughter தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா இன்னும் எந்த சினிமாவிலும் நடிக்க ஆரம்பிக்கா விட்டாலும் சோஷியல் மீடியாவில் படு பிசியாக உள்ளார். ஆனால் சிதாராவுக்கு தொடர்பான அனைத்து வீடியோக்களும் சோஷல் மீடியாவில் அவருடைய தாய் நம்ரதா போஸ்ட் செய்து வருகிறார். புதிதாக சிதாராவுக்கு தொடர்பான ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக மாறியுள்ளது. அதில் சூப்பர் ஸ்டாரின் மகள் விளக்குமாறு கொண்டு வீட்டை பெருக்குவதாக காணப்படுகிறார். இப்போது இந்த…

  • சிம்புவின் திருமணம்! டி.ராஜேந்தர் விளக்கம்!

    simbu t rajendar நடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி டி.ராஜேந்தர் M.A – உஷா ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக…